📌 மிஷன் 100 · நாள் 1/30 · வெள்ளி, 23 அக் 2026
ஒரு டாக்டர். ஒரு அறை. ஒரு கனவு.
உங்கள் நிறுவனத்தையும் பங்குச் சந்தையில் பட்டியலிடலாம்
1987.
துபாய்.
ஒரு சிறிய கிளினிக்.
அங்கே ஒரே ஒரு டாக்டர்.
அவர் பெயர் டாக்டர் ஆசாத் மூப்பன்.
கேரளா, மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்துக்காரர்.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் மகன்.
கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர்.
அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றினார்.
நிம்மதியான அரசு வேலை, நல்ல மரியாதை. (நாமாக இருந்தால் அரை காசு சம்பளம்னாலும் அரசு வேலை தான் வேணும் என உட்கார்ந்திருப்போம்)
ஆனால் அவர் மனதில் தோன்றிய கேள்வி வேற இருந்தது:
"ஆஹா! நான் மட்டும் வாழ்ந்தால் போதுமா?"
1987-இல் அரசு வேலையை உதறிவிட்டு துபாய் சென்றார்.
தெரியாத நாடு. பின்னால் பெரிய பணக்கார பின்னணி கொண்ட குடும்பமும் இல்லை.
ஒரே ஒரு டாக்டர் கொண்ட ஒரு சிறிய கிளினிக்கைத் துவக்குகிறார்.
பிறகு என்ன நடந்தது?
சிறுதுளி. பெரு வெள்ளம்.
ஒரு கிளினிக் இரண்டானது.
இரண்டு பத்தானது.
பத்து நூறானது.
34 ஆண்டுகளில் 8 நாடுகளில் 377-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருந்தகங்கள்.
20,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்.
சுமார் 3,000 டாக்டர்கள்.
அதுதான் Aster DM Healthcare.
ஓ.கே. வளர்ந்து விட்டோம். நல்ல வசதி. நல்ல வாழ்க்கை விட்டாரா! இல்லை மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறார்.
2018.
"இது என் குடும்ப நிறுவனமாக மட்டும் இருக்கக் கூடாது. இது மக்களின் நிறுவனமாக மாற வேண்டும்."
Aster இந்தியப் பங்குச் சந்தையில் IPO வந்தது.
BSE, NSE இரண்டிலும் பட்டியலிடப்பட்டது.
சாதாரண மக்களும் ஒரு பங்கு வாங்கி அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் நானும் ஒருவர் என்று பெருமிதத்துடன் சொன்னார்கள்.
இன்று Aster எங்கே இருக்கிறது?
2024-இல் வளைகுடா நாடுகளில் உள்ள தொழிலைத் தனியாகப் பிரிக்கிறார்கள்.
அதில் 65% பங்கை ஒரு முதலீட்டுக் குழுமம் வாங்குகிறது.
அதற்கு வந்த தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா?
சுமார் ₹7,500 கோடி (90 கோடி டாலருக்கு மேல்).
பிறகு,
இந்தியாவில் இன்னொரு பெரிய மருத்துவமனைக் குழுவுடன் இணைந்தார்கள்.
இன்று அதன் பெயர் Aster DM Quality Care Ltd.
இந்தியத் தொழிலின் ஆண்டு வருமானம் மட்டும் ₹4,138 கோடி.
துபாயில் ஒரு அறையில் தொடங்கிய கனவு.
இன்று பங்குச் சந்தையில் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள நிறுவனம்.
அதோடு அவர் தன் ஊரை மறக்கவில்லை.
கிராமப்புற மருத்துவ மையம் அமைத்தார்.
7,000 ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
வணிகமும் சதக்காவும் ஒன்றாக.
இப்போது ஒரு கேள்வி. நெஞ்சில் கை வைத்துக் கேளுங்கள்.
தமிழ்நாட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 3–4 நிறுவனங்கள் பங்குச் சந்தைக்கு வருகின்றன.
இந்த ஆண்டு Milky Mist வந்தது. லலிதா ஜுவல்லரி வந்தது.
அவற்றில் தமிழக முஸ்லிம் நிறுவனம் எத்தனை?
ஆம்பூர், வாணியம்பாடி தோல் தொழிற்சாலைகள்.
கீழக்கரை, காயல்பட்டினம் வணிகக் குடும்பங்கள்.
மேலப்பாளையம், மதுரை, சென்னை வியாபாரிகள்.
நம்மிடம் தொழில் இருக்கிறது.
நம்மிடம் உழைப்பு இருக்கிறது.
நம்மிடம் நூற்றாண்டு வணிக அனுபவம் இருக்கிறது.
பிறகு ஏன் நம் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை?
மலப்புறத்திலிருந்து ஒருவரால் முடிந்தது என்றால்,
மதுரையிலிருந்து ஏன் முடியாது?
ஆம்பூரிலிருந்து ஏன் முடியாது?
உங்களால் ஏன் முடியாது?
இந்தத் தொடர் கட்டுரையின் நோக்கம் நம்மவர்களின் 100 நிறுவனங்கள் வரும் காலங்களில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும். நீங்கள் போய் இந்த பங்குச் சந்தை பெல்லை அடிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ். நிய்யத் வையுங்கள்.
🔔 நாளை (நாள் 2):
"வங்கியிடம் ஒரு ரூபாய் கடன் வாங்காமல், வட்டி கட்டாமல், கோடிக்கணக்கில் மூலதனம் திரட்ட முடியுமா?"
முடியும். சட்டப்படி அதுவும் ஹலாலாக.
எப்படி? ஒரு நாள் காத்திருங்கள். நாளை சொல்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
இந்தக் கட்டுரையை உங்கள் வணிக நண்பர்களுக்கு forward செய்யுங்கள். அடுத்த Aster அவர்களில் ஒருவராக இருக்கலாம். 🤲
👉 முழுத் தொடரையும் படிக்க உம்மஜோவில் இணையுங்கள் (இலவசம்):
🏪 வணிகர்கள்: https://ummazo.com/join.php
👤 வாங்குபவர்கள்: https://ummazo.com/member.php
— ஏ.கே. ஜமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், மதுரை எகனாமிக் சேம்பர். Founder: Ummazo.com
உம்மஜோ · WhatsApp மட்டும்: +91 90035 22687